இந்தியாவிற்கான துப்பாக்கிகளைத் தயாரித்துத் தர, ஐக்கிய அரபு அமீரகம் விருப்பம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நாளுக்கு நாள் போர் பதற்றமானது அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், இந்திய அரசு பல நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருகின்றது. இந்நிலையில், ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவில் ஏகே47 ரக துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளது. இந்த சூழ்நிலையில், துப்பாக்கிளைத் தயாரித்துத் தர ஐக்கிய அரபு அமீரகம் விருப்பம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து அந்நாடு இந்தியாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சிஏஆர்816 ரக துப்பாக்கிகளை இந்தியாவில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரித்து தர விருப்பம் தெரிவித்து உள்ளது. மொத்தம் 93 ஆயிரத்து 895 துப்பாக்கிகளைத் தயாரிக்க முடியும் எனவும் கூறியுள்ளது. இந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான நிலம், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட விவரங்களை வழங்கினால், விரைவில் தொழிற்சாலையினை ஆரம்பிக்கவும் முடிவு செய்துள்ளது.