அரபு நாடுகளில் உள்ள இந்தியர்களை எச்சரித்துள்ள இந்திய அரசு!

25 April 2020 அரசியல்
hendalqassimi.jpg

அரபு நாடுகளில் உள்ள இந்தியர்களை, தேவையற்ற மத விஷயங்களில் ஈடுபட வேண்டாம் என, இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை பல நாடுகள் கடைபிடித்து வருகின்றன. அப்படி கடைப்பிடித்து வருகின்ற நேரத்தில், அரேபிய அரச குடும்பத்தினைச் சேர்ந்த இளவரசி உள்ளிட்டப் பலரின் கண்களுக்கு ஒரு சில விஷயங்கள் இணையத்தில் சிக்கின.

சில வருடங்களுக்கு முன், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தேஜஸ்வி யாதவ் டிவிட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில், 95% இஸ்லாமியப் பெண்கள், சில நூற்றாண்டுகளாக உடலுறவு வைத்துக் கொள்வது கிடையாது. அனைத்து பெண்களும், செக்சினால் குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனே தவிர, அன்பால் அல்ல என்று பதிவிட்டு இருந்தார்.

ஊரடங்குக் காலத்தில், இணையத்தினை நோண்டிக் கொண்டு இருந்த அரேபிய குடும்பம் இந்த டிவீட்டினைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி, அரேபியாவில் இருக்கும் இந்தியர்களும் இதனைப் போன்றக் கருத்துக்களை பதிவிட்டு வந்ததைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து இளவரசி ஹெண்ட் அல் குவசாமி டிவிட்டரில், கடும் எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

அதில், அரேபியாவில் தங்கியிருக்கும் இந்தியர்கள், மதச்சார்பு மற்றும் அரேபியாவின் கலாச்சாரத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தால், அவர்கள் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். அத்துடன், அவர்கள் அரேபியாவில் இருந்து வெளியேற்றப்படுவர் என எச்சரித்தார். இதற்கு 14,000 லைக்குகள் கிடைத்தது.

இங்கு யாரும் ஓசியில் வேலைப் பார்க்கவில்லை. பார்க்கின்ற வேலைக்கு ஏற்ற பணமும், உணவும் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. நான் இந்தியர்களுடன் தான் வழர்ந்தேன். தற்பொழுது அவர்கள் இவ்வாறு பேசுவது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, வேதனைக்குரியதும் கூட எனத் தெரிவித்தார். இது குறித்துப் பலரும் தங்களுடையக் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதில், இந்துக்கள் அரேபிய நாடுகளில் நன்றாகவே நடத்தப்படுகின்றனர். இந்நிலையில், இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிற நாடுகளில் வசிப்பவர்கள், வேறு மதத்தினரை பற்றித் தவறாகப் பேசக் கூடாது எனவும், அது நம்முடைய அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் வெளியுறவுத் துறையானது, அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளது.

HOT NEWS