செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி சாதனை படைத்த அமீரகம்!

20 July 2020 அரசியல்
satellite11.jpg

ஜப்பானில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, செவ்வாய் கிரகத்திற்கு தன்னுடைய விண்கலத்தினை ஐக்கிய அரபு அமீரகம் சாதனை படைத்து உள்ளது.

அமெரிக்காவின் கொலோராடோ பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத்திற்கும் மேலாகப் பயிற்சி பெற்ற அமீரக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், அமீரகத்தில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும், அமெரிக்காவின் கொலோராடோ பல்கலைக்கழகத்திலும் இந்த செயற்கைக்கோளினை உருவாக்கி உள்ளனர். வெறும் ஆறே மாதத்தில் இந்த செயற்கைக் கோளினை உருவாக்கி உள்ளனர்.

இந்த செயற்கைக்கோளானது, ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்ற விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஹெச்2 ராக்கெட் மூலம் விண்ணிற்குச் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளானது, செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் மூலம் எவ்வாறு தொடர்ச்சியாக வெளியாகின்றது என ஆய்வு செய்ய உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, அமீரகமும் தற்பொழுது விண்வெளி ஆய்வில் இறங்கி உள்ளது.

HOT NEWS