தற்பொழுது இந்தியாவில், ஆன்லைன் உணவு விற்பனை நாளுக்கு நாள், பெருகி வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தற்பொழுது முதலீடு செய்து வருகின்றன. 2021ம் ஆண்டு, இந்த சந்தையின் மதிப்பு, கிட்டத்தட்ட 2.5-3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி, சர்வதேச நிறுவனங்களும் இந்த வியாபாரத்தில் குதித்துள்ளன.
ஒவ்வொரு மாதமும் சுமார் 13 மில்லியன் ஆர்டர்கள் வருவதாக, இந்த வியாபாரத்தில் உள்ள நிறுவனங்களின் நிலவரம் தெரிவிக்கின்றது. இந்தத் தொழில் துறை அபரீத வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், தற்பொழுது ஒரு மாபெரும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது.
அதன் படி, உபர் ஈட்ஸ் மற்றும் ஓலா நிறுவனங்களைக் காட்டிலும், SWIGGY மற்றும் ZOMATO ஆகிய நிறுவனங்களில் தான், அதிக அளவில் ஆர்டர்கள் வருகின்றன. மேலும், இந்த இரண்டு நிறுவனங்களுமே, அதிக விலையுள்ள உணவுப் பொருட்களை, பல ஆபர்களுடன் விற்பதால், இவைகளில் வாங்குவதற்கே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், டெலிவரி நேரமும், இந்த இரண்டு நிறுவனங்களில், கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளதாலும், மிக விரைவாக உணவினை டெலிவரி செய்வதாலும், இந்த இரண்டு நிறுவனங்களும், இந்தியாவில் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆன்லைன் உணவு சந்தையின் மதிப்பு, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அபரித வளர்ச்சி அடையும் எனவும், அப்பொழுது சர்வதேச நிறுவனங்கள் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.