சொன்னதை செய்த உத்தவ் தாக்ரே! விவசாயிகளின் கடன் தள்ளுபடி!

23 December 2019 அரசியல்
udhavthakrey.jpg

கடந்த மாதம் ஒரு வழியாக போராடி முடித்து, இந்த மாதத் தொடக்கத்தில் பதவியேற்றுள்ள சிவசேனா கட்சியானது, தற்பொழுது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரில், அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவரும், மஹாராஷ்டிரா மாநில முதல்வருமான உத்தவ் தாக்ரே அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் வாக்கு சேகரிக்கும் பொழுது, விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்தார். அவர் கூறியபடியே, தற்பொழுது விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்துள்ளார்.

சுமார், 2 லட்சத்திற்கும் குறைவான, விவசாயக் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இதனால், மஹாராஷ்டிரா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, அம்மா உணவகம் போல மஹாராஷ்டிராவில் ஷிப் போஜன் என்றப் பெயரில், மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில், 10 ரூபாயில் மதிய உணவு வழங்கப்பட உள்ளது. இதற்காக 50 இடங்களில், உணவளிக்கும் மையங்கள் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS