முதலமைச்சராகும் உத்தவ் தாக்ரே! சரிசமமாகப் பதவிகள் பங்கீடு! தலைவர்கள் வாழ்த்து!

27 November 2019 அரசியல்
shivsena.jpg

நாளை காலையில், மஹாராஷ்டிராவின் shivsena, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே பதவியேற்க உள்ளார். இதனை அக்கட்சியானது, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள உத்தவ் தாக்ரே, வெவ்வேறு கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் உடைய நாங்கள் (சிவசேனா-காங்கிரஸ்) இன்று இணைந்து இருக்கின்றோம். 30 ஆண்டுகளாக, உடனிருந்தவர்கள் (பாஜக) எங்களை நம்பவில்லை. ஆனால், எங்களை எதிர்த்தவர்கள் எங்களை நம்புகின்றார்கள். அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.

இந்த அரசாங்கம், மக்களுக்கான அரசாங்கமாக செயல்பட உள்ளது. பழிவாங்கும் எவ்வித செயல்பாடுகளும் நடைபெறாது எனக் கூறினார். சிவசேனாவிற்கு ஒரு முதல்வர் பதவி மற்றும் 13 அமைச்சர் பதவிகளும், தேசியவாத காங்கிரஸ் தலைவருக்கு துணை முதல்வர் மற்றும் 13 அமைச்சர் பதவிகளும், காங்கிரஸ் கட்சிக்கு அவைத்தலைவர் மற்றும் 13 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை முதல்வர் பதவி ஏற்கும் விழாவானது, மஹாராஷ்டிராவின் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, சோனியா காந்தி, முக ஸ்டாலின், மம்மதா பேனர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

புதிதாக ஆட்சி அமைக்க இருக்கும் சிவசேனா கட்சிக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS