அயர்லாந்து நாட்டு விமானத்துறைத் தற்பொழுது முழுவீச்சில், ஒரு விசாரணையில் ஈடுபட்டுள்ளது. அதற்குக் காரணம், சென்ற வாரம் அந்த நாட்டின் கடல் பகுதியில் ஏற்ப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
நவம்பர் 9ம் தேதி மதியம் 1மணி 10 நிமிடத்தின் பொழுது, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் BA94, மோன்ட்ரியலில் இருந்து லண்டனுக்குப் பறந்து கொண்டிருந்தது. அதனை இயக்கிய பெண் விமானி, ஷெனான் நகரின் விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டார். அப்பொழுது, மிக அவசரமாகப் பேசியுள்ள அவர், இன்று இராணுவ ஒத்திகை எதுவும் நடக்கிறதா? என்று கேட்டுள்ளார். அதற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அப்படி எதுவும் நடத்தப்படவில்லை என்றுக் கூறியுள்ளார். பின்னர், ஏன் என்று, அந்த விமானியிடம் கட்டுப்பாட்டு அறை தொடர்பாளர் கேட்டுள்ளார்.
உடனே, அதற்குப் பதில் அளித்த விமானி, இங்கு எங்கள் விமானத்தை விட மிக வேகமாக ஒன்றுப் பறந்து கொண்டிருக்கிறது. என்று கூறியுள்ளார். அதற்குப் பதில் தெரிவித்தக் கட்டுப்பாட்டு அறைத் தொடர்பாளர், அப்படி, ஒன்றுமே ரேடாரில் தெரியவில்லையே என்று கூறியுள்ளார். மீண்டும் பேசிய அந்த பெண் விமானி, அது மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், அதே பாதையில் பயணம் செய்த விமானம் விர்ஜின் ஏர்லைன்சின் VS76.அந்த விமானத்தை இயக்கிய விமானி, எங்களை விட வேகமாக ஒரு விமானம் மிகுந்த வெளிச்சத்துடன் பறந்து கொண்டிருக்கிறது, என்று கூறியுள்ளார். இதனை ரேடாரில் காண இயலாததால், விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் குழம்பினர். ஏனெனில், அவ்வாறு எதுவும் ரேடாரில் தெரியவில்லை. பின்னர், மீண்டும் தொடர்பு கொண்ட விமானி, தொடர்ந்து பல பறக்கும் பொருட்கள் எங்களைத் தாண்டி வேகமாக, அதிக ஒளியுடன் பறந்து செல்கின்றன, எனக் கூறியுள்ளார்.
இது இரண்டுமே, ஒரு பகுதியில் நடந்துள்ளதால், தற்பொழது, லண்டன் மற்றும் அயர்லாந்து நாட்டு விமானத்துறை இணைந்து இந்த விசித்திரமான சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.
இதனைப் பல விஞ்ஞானிகள், இவைகள் பறக்கும் தட்டுகள் எனவும், இவைகளை நம்மால் துரத்திப் பிடிக்க இயலாத வேகத்தில் பறக்கும் எனவும் கூறியுள்ளனர்.