புதிய கல்வியாண்டு காலண்டர்! யூஜிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது!

03 May 2020 அரசியல்
ugc.jpg

இந்த 2020-2021ம் ஆண்டுக்கான கல்வியாண்டு, காலண்டரினை யூஜிசி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனை முன்னிட்டு, இந்தியா முழுவதும் வருகின்ற மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு, சிபிஎஸ்ஈ தேர்வுகள் எனப் பல பள்ளித் தேர்வுகள் தற்பொழுது வரை, நடைபெறாமல் உள்ளன. மேலும், இந்த மாதம் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகளும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்தத் தேர்வுகளை நடத்தி, பின்னர் அந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு, நுழைவுத் தேர்வுகளை நடத்தி அதனைத் தொடர்ந்து அவர்களை கல்லூரிகளில் அனுமதிக்க வேண்டியும் உள்ளது. இதற்காக மாநில அரசுகள் அனைத்துமே, மத்திய அரசின் ஆணையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு உள்ளன. இந்நிலையில், எப்பொழுது தேர்வு நடத்த வேண்டும், எப்பொழுது மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்பது குறித்த அட்டவணையை யூஜிசி அறிவித்துள்ளது.

அதன்படி, தற்பொழுது நடத்தபாடமல் இருக்கின்ற அனைத்து கல்லூரித் தேர்வுகளும், வருகின்ற ஜூலை 2020 முதல் ஆகஸ்ட்2020 வரைக்குள் நடத்தி முடிக்க அனுமதித்துள்ளது. அதே போல், 2020-2021க்கான கல்வியாண்டின் அட்மிஷனானது, ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31க்குள் முடிவுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதே போல், இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகள் திறக்க அறிவுறுத்தியுள்ளது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று, முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியில் படிக்க ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்களும், மாணவர்களுக்கு வைக்கின்றத் தேர்வுகளை மிக எளிதான வழிகளில், விரைவாக நடத்தி முடிக்கும் விதத்தில் நடத்த அனுமதித்துள்ளது.

பிஎச்டி, எம்பில் பட்ட படிப்புகளுக்கு, கூடுதலாக ஆறு மாத கால அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒருவேளை, இந்த கொரோனா வைரஸ் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலோ அல்லது அது அதிகளவில் பரவினாலோ, தேர்வுகளுக்குப் பதிலாக இண்டர்னல் மதிப்பெண்ணின் 50% அடிப்படையும், இதற்கு முந்தைய செமஸ்டர் தேர்வின் 50% மதிப்பெண்ணையும் கருத்தில் கொண்டு, இந்த செமஸ்டர் தேர்வு இல்லாமல், மதிப்பெண் வழங்கலாம். பல்கலைக்கழகங்கள், டெர்மினல், இன்டர்மீடியேட் செமஸ்டர்களை, ஆன்லைன், மற்றும் நேரடி முறையிலும் நடத்தலாம்.

பரிட்சையை மூன்று மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாக குறைப்பதற்குத் தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும் தேர்ந்தெடுக்கலாம். வாரத்திற்கு ஆறு நாட்களை வேலை நாட்களாக கட்டாயம் பின்பற்ற வேண்டும். வீடியோ ட்ரெய்னிங், வீடியோ க்ளாஸ்களுக்கு அனைத்து கல்லூரிகளும் தயாராக வேண்டும். அதற்கேற்றாற் போல, ஆசிரியர்களைத் தயார் படுத்த வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்கள் தொடர்ந்து, பயிற்சி பெறுவதன் மூலம், 25% சிலபஸை ஆன்லைனிலேயே முடிக்க இயலும். இந்த கல்வியாண்டுக்கான முதல் செமஸ்டரானது டிசம்பருக்குப் பதில் 01,01,2021 முதல் 25,01,2021 வரை நடத்தலாம். இரட்டைப் படை செமஸ்டரை 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அன்று திறக்கலாம். மேலும், இரட்டைப்படை செமஸ்டரை 26-05-2021 முதல் 25-06-2021 என்ற காலத்தில் நடத்த அனுமதி அளித்துள்ளது.

HOT NEWS