செமஸ்டர் இறுதி தேர்வு கட்டாயம்! யூஜிசி அதிரடி அறிவிப்பு!

03 August 2020 அரசியல்
ugc.jpg

கல்லூரிகளில் நடைபெறாமல் உள்ள இறுதி செமஸ்டர் தேர்வானது, கட்டாயம் நடத்தப்படும் என யூஜிசி அறிவித்துள்ளது.

மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், இந்தியாவின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதிக் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதில், இறுதி செமஸ்டர் தவிர்த்து மற்ற செமஸ்டர்கள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக உட்படப் பல அரசுகள் அறிவித்து உள்ளன.

இந்தியாவின் பல மாநிலங்களும், அந்தந்த உயர்நீதிமன்றங்களில் இது குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளன. இதற்கு தற்பொழுது பிரமாணப் பத்திரம் ஒன்றினை யூஜிசி தாக்கல் செய்துள்ளது. அதில், மாணவர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டே, இறுதித் தேர்வானது கட்டாயம் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வானது, செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளது. இதனால், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்றுக் கருதப்படுகின்றது. இந்த பிரமாணப் பத்திரம் குறித்துப் பேசியுள்ள உயர்நீதிமன்றம், உயர்கல்வி குறித்த அரசின் முடிவுகளில், நீதிமன்றம் தலையிட முடியாது என்றுக் கூறியுள்ளது.

HOT NEWS