உக்ரைன் விமானம் சுடப்பட்டதற்கு பின்னால் பழி வாங்கும் செயலா? காரணம் என்ன?

14 January 2020 அரசியல்
ukraineflightcrash.jpg

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவுவிற்கு 176 பயணிகளுடன், போயிங் 737 விமானம் புறப்பட்டது. அதில், ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், உளவுத்துறை அளித்துள்ளத் தகவலின் படி, விபத்துக்குள்ளான விமானத்தின் மீது, ஏவுகணைகள் தாக்கப்பட்டதற்கான தடையங்கள் இருப்பதாக தெரிவித்தார். இவர் கூறியதை அமெரிக்கா ஆதரித்தது. இதனிடையே, இங்கிலாந்து நாடும் ஈரானின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தது.

இதனிடையே, விமானத்தின் மீது தவறுதலாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என, ஈரான் செய்தித் துறை தகவல் அளித்தது. இதனை உலக நாடுகள் பலவும் கண்டித்தன. நிலைமையை உணர்ந்துள்ள ஈரான், மனிதத் தவறுகளின் காரணமாக, இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது. மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் பிளாக் பாக்ஸ் எனும் கருப்புப் பெட்டியினை, அமெரிக்காவிடமோ அல்லது போயிங் நிறுவனத்திடமோ தர, ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலைப் பழிவாங்கும் செயலாக, அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். கடந்த 1998ம் ஆண்டு, ஈரான் நாட்டில் இருந்து, மெக்காவிற்கு சென்ற ஏர்பஸ் ஏ 300 விமானத்தினை, அமெரிக்காவின் கடற்படைக் கப்பலான, யுஎஸ்எஸ் வின்செஸ் ஜூலை 30, 1998ம் ஆண்டு அன்று சுட்டுத் தள்ளியது. இதனால், அந்த விமானம் வீழ்ந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த 290 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்குப் பழிவாங்கும் செயலாகவே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றது எனக் கூறுகின்றனர்.

HOT NEWS