பணம் இல்லை! ஐநா பொதுச் செயலாளர் அதிரடி!

08 October 2019 அரசியல்
AntonioGuterres.jpg

இந்த மாதம் முடியும் பொழுது, செலவு செய்வதற்கு ஐநாவிடம் பணம் இல்லை என, ஐநா பொதுச்செயலாளர் ஆன்டானியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது, 230மில்லியன் பற்றாக் குறையுடன் ஐநா அமைப்பு செயல்பட்டு வருகின்றது. ஐநாவில் 37,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுவரை 70% பணம் மட்டுமே, ஐநாவிற்கு வந்துள்ளதாகவும், அதனை ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இன்னும் 230 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செப்டம்பர் மாதம் பாக்கியாக வராமல் இருப்பதால், கடும் பணம் நெருக்கடியில் ஐநா செயல்பட்டு வருகின்றது.

இதனால், செலவைக் கட்டுப்படுத்த ஐநாவின் கூட்டங்களையும், பயணங்களையும் தள்ளி வைத்துள்ளார் குட்டர்.

கடந்த 2018-2019ம் ஆண்டுக்கு இடையில், பொது அமைதி தமற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக சுமார் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழித்துள்ளது ஐநா. அதில், 22% பணத்தினை அமெரிக்கா வழங்கியுள்ளது.

உறுப்பு நாடுகளில் நிலவி வரும், பணப்பற்றாக்குறைக் காரணமாக அவர்களால் குறித்த நேரத்தில், ஐநாவிற்கு பணம் செலுத்த இயலாததே, இந்தப் பணப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் என, நிபுணர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS

S