ஜூலை மாதத்தில் வெட்டுக்கிளி படை மீண்டும் வரும்! ஐநா எச்சரிக்கை!

06 June 2020 அரசியல்
locustjaipur.jpg

இந்தியாவிற்குள் மீண்டும் ஜூலை மாதத்தினை ஒட்டி, வெட்டுக்கிளிகள் படை தாக்கும் அபாயம் உள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உருவாகியிருக்கும் இந்த வெட்டுக்கிளிகள் படையானது, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி அவ்வப்பொழுது, இந்தியாவிற்குள் நுழைந்து அட்டூழியம் செய்து வருகின்றன. கூட்டம் கூட்டமாக வருகின்ற இந்த வெட்டுக்கிளிகள், விளைநிலங்களுக்குள் புகுந்து தீவிரமாக அங்குள்ள பயிர்களை உண்கின்றன. அதன் உண்ணும் வேகத்தால், அனைத்து பயிர்களும் ஒரே நாளில் காலியாகின்றன.

இந்த வெட்டுக்கிளிகள் படையானது, இந்தியாவின் குஜராத் பகுதியில் முதலில் காணப்பட்டது. பின்னர், அதனைக் கட்டுப்படுத்தினர். இந்நிலையில், இந்த மாதம் மீண்டும் இந்த படையானது, ராஜஸ்தான், ஜார்கண்ட் எனப் பல மாநிலங்களுக்குள் புகுந்தது. இந்த வெட்டுக்கிளிகள் கூட்டமாகப் பயணிக்கக் கூடியவை. ஒரு நாளைக்கு 120 முதல் 150 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் படைத்தவை.

இந்த வெட்டுக்கிளிகள் ஒரு மணி நேரத்தில் 35,000 பேரின் உணவினை உண்டுவிடுகின்றன. இவைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மாநில அரசுகளும், மத்திய அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மீண்டும் மற்றொரு எச்சரிக்கையானது ஐநா அமைப்பின் உணவு மற்றும் வேளாண் பிரிவானது எச்சரித்துள்ளது.

அதன்படி, வருகின்ற ஜூலை மாதமும் இந்த வெட்டுக்கிளிகள் படையானது இந்தியாவிற்குள் நுழையும் எனவும், முன்பை விட மிக வேகமாக செயல்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இதனால், இந்தியாவின் 16 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

HOT NEWS