வியக்க வைக்கும் விலங்குகள்

14 July 2019 தொழில்நுட்பம்
tortoise.jpg.jpg

உலகில் பல்லாயிரம் விலங்குளின் அழிவிற்குப் பிறகு, எஞ்சியுள்ள விலங்குகளில், நமக்குத் தெரிந்தவை வெறும் 5% மட்டுமே. அதிலும், பெரும்பாலான விலங்குகள் அழியும் நிலையில் உள்ளதாக, உலக சுகாதார மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் கவலைத் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில அதிசயக்கத்தக்க விலங்குகளைப் பற்றிப் பார்ப்போம்.

பினாக்கியோ தவளை [PINOCCHIO FROG]

இதன் போட்டோவைப் பார்த்தாலே, உங்களுக்கு ஒரு வித நக்கலுடன் கலந்த சிரிப்பு வர வாய்ப்புண்டு. அப்படி இருக்கும் இந்தத் தவளையைத், தற்போதுக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூக்கின் நுனி மற்றத் தவளைகளைப் போல் இல்லாமல், மிக கூர்மையாகக் காணப்படுகிறது. இது நியூ குனியாவில் ஒரு அரசி மூட்டையிலிருந்து வெளியேத் தவ்விய போது, இதனைப் பற்றியத் தகவல் உலகிற்குத் தெரியவந்துள்ளது. இயற்கையாகவே இதற்கு ஆபத்து என்று அறிந்ததும், இதன் மூக்கு நீளமாக மாறும். பிரச்சனை இல்லை என்றதும் சுருங்கி விடும்.

டம்போ ஆக்டோபஸ் (dumbo octopus)

இன்னும் கடலடியில் கண்டுபிடிக்காமல், லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகளில், இந்த ஆக்டோபஸை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இவைகள் பொதுவாக, ஆழ்கடலில் மட்டுமே வாழக் கூடியவையாக உள்ளனர். இவை நுண்கிருமிகளையும், பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றன. இதனை மெக்சிகோ வளைகுடாவில் உள்ளக் கடற்கரையில் கண்டுபிடித்துள்ளனர். இதனை 2014ல் கண்டுபிடித்தாலும், இதனைப் பற்றிய உண்மைகள் தற்பொழுதே விஞ்ஞானிகளுக்குப் புலப்படத் தொடங்கியுள்ளது. பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கும் இது மிக சாதுவான ஒன்றாகும்.

பிங்க் அய்டு கிராஸ்ஹூப்பர் (PINK EYED GRASSHOPPER)

இந்த வெட்டுக் கிளிகளின் கண்கள் பார்ப்பதற்கு, பிங்க் நிறத்தில் இருக்கும். இது உலகில் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இதுப் பொதுவாக, ஆப்பிரிக்க மலைகளில் மட்டுமேக் காணப்படுகிறது. இதுவும் மற்ற வெட்டுக்கிளிகளைப் போல, சாதாரணமாக புற்களையும் இலைகளையும் தின்று உயிர் வாழ்கிறது.

ஈலி பீக்கா (ILI PIKA)

இவைப் பார்ப்பதற்கு எலிகளைப் போன்று இருந்தாலும், இவைகள் மிக அழகானவை. இந்த விலங்குகள், சீனாவின் வடக்கில் உள்ள மலைகளில் அதிகம் காணப்படுகிறது. புற்களை உண்டு வாழும் இவை, மலைகளிலேயே அதிகம் வாழ்கின்றது. இவைகளைப் பார்ப்பதற்காகவே சீனாவின் வடக்குப் பகுதிகளில் உள்ள மலைகளுக்கு சுற்றுலாச் செல்கின்றனர்.

HOT NEWS