விடைபெற்றார் அண்டர்டேக்கர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

24 June 2020 விளையாட்டு
undertakerretired.jpg

கடந்த 30 ஆண்டுகளாக WWE விளையாட்டில் பங்கேற்று வந்த உலகப் புகழ்பெற்ற நட்சத்திர மல்யுத்த வீரரான அண்டர்டேக்கர், தற்பொழுது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மார்க் வில்லியம் காலவே என்பது தான் அண்டர்டேக்கரின் இயற்பெயர். WWE போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பு, உள்ளூர் மல்யுத்த வீரராக இருந்தவர், திடீரெனக் கிடைத்த வாய்ப்பினை மிக திறமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தினல் உள்ள ஹூஸ்டன் நகரினைச் சேர்ந்த இவர், 1984ம் ஆண்டு மல்யுத்தத்தினை தொழிலாக செய்ய ஆரம்பித்தார். 1990ம் ஆண்டு WWE அமைப்பில் சேர்ந்தார்.

இவர் இல்லாமல், ரெஸ்ட்லிமேனியா நடைபெற்றதில்லை. 90ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான வீரராக இவர் இருந்து வந்தார். இவர் வருகிறார் என்றால், பல வீரர்களும் அஞ்சி நடுங்குவர். இவருடைய இண்ட்ரோவுக்கு உள்ள மரியாதை, இன்று வரை வேறு எந்த வீரருக்கும் இல்லை. அந்த அளவிற்கு இவர் செல்வாக்கு, மக்கள் மத்தியில் இருந்து வந்தது. தற்பொழுது நடைபெற்ற தி லாஸ்ட் ரைய்ட் என்ற நிகழ்ச்சியுடன், தன்னுடைய மல்யுத்த வாழ்க்கையினை முடித்துக் கொண்டார்.

இதனை, அவருடைய ரசிகர்கள் கண்ணீர் மல்க சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர் பேசுகையில், நான் சாதிக்க சாதனைகள் என எதுவும் இல்லை. இனி நான் தகர்க்க வேண்டிய சாதனைகள் என எதுவும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவது தான் தற்பொழுது சரியான ஒன்று அவர் கூறியுள்ளார்.

HOT NEWS