இந்தியாவில் 2016-2018ம் ஆண்டுக்குள், கிடத்தட்ட 50லட்சம் பேருக்கும் அதிகமானோர், வேலை இழந்துள்ளதாக ஆராய்ச்சியின் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் உள்ள அசீம் பிரேம்ஜி என்ற பல்கலைக்கழகம் நடத்திய, ஆராய்ச்சியில், 2016, நவம்பர் மாதம் நடைபெற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, 2018ம் ஆண்டுக்குள், கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் தன்னுடைய வேலையை இழந்துள்ளனர்.
குறிப்பாக, நகரத்தில் வசிக்கும், மூன்றில் ஒரு பெண் தன்னுடைய வேலையை இழந்துள்ளார். ஆண்களின் நிலை இதை விட மோசமான ஒன்றாகும். உலகிலேயே, இந்தியாவில் மட்டும் தான், படித்தவர்களுக்கு தகுந்த வேலைக் கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
சர்வ சிக்ச அபியான் என்ற திட்டத்தின் மூலம், அனைவருக்கும் கல்வி என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. போகின்ற போக்கைப் பார்த்தால், அனைவருக்கும் வேலை என புதிய திட்டம் தீட்டவேண்டியிருக்கும் போல!