கமல்ஹாசன், திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், அவருக்காகப் பிரம்மாண்டமான கலைநிகழச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் நான் எனப் பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு, அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு சினிமாத் துறையின் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், ரசிகர்களுக்காக டிக்கெட்டுகளும் அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றது. ரூபாய் 999 முதல் இந்த டிக்கெட்டுகள் விற்க்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். இக்கலை நிகழ்ச்சியானது, நாளை மாலை 5 மணிக்கு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்குகின்றது.
இதில் கலந்து கொள்ள, நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விக்ரம், தல அஜித் உட்பட பலருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில், அனைவரும் கலந்து கொண்டாலும், தல அஜித் கலந்து கொள்வாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
பல வருடங்களாக, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அஜித் குமார், நடிகர் சங்கப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், நாளை நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கு அவர் வருவாரா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது. நாளை கண்டிப்பாக அஜித் குமார் வருவார் என, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சற்றுமுன், கிடைத்தத் தகவலின் படி, இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக, புக்மைஷோ வலைதளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.