கோயம்புத்தூரில் உள்ள கவுண்டம்பாளையத்தில், படுக்கையறைகளை எட்டிப் பார்க்கும் மர்ம நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வீடுகளில், பெரும்பாலான வீடிகளில் சிசிடிவி கேமிராக்ளைப் பொருத்தி வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் தன்னுடைய வீட்டில் இருந்த கேமிராவில் பதிவானக் காட்சிகளைப் பார்த்துள்ளார். அதில், அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இரவு 10.30 மணியளவில், மர்ம நபர் ஒருவர், அந்த வீட்டிற்கு வருகின்றார். பின் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்ததும், அங்குள்ள துணிகளை விலக்கிவிட்டு, படுக்கையறையை உள்ளேப் பார்த்துள்ளர். பின்னர், மீண்டும் சுவர் ஏறி வெளியேக் குதித்து, வண்டியில் ஏறிச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து, அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் இதனைக் கூறி, சிசிடிவிக் காட்சிகளைப் பார்த்துள்ளார். அந்த வீட்டிலும், அந்த மர்ம நபர் அதே செயலை எவ்வித மாற்றமும் இன்றிச் செய்துள்ளார். இதனால், அந்த வீட்டினைச் சேர்ந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர் யார் என்பதுத் தெரியாத காரணத்தினால், கோயம்புத்தூர் துடியலூர் காவல் நிலையத்தில், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். சிசிடிவியில் பதிவானக் காட்சிகளையும், அவர்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். அவைகளைப் பார்த்தப் போலீசார், அந்த மர்ம நபர் சைக்கோவாக இருக்க வாய்ப்பிருக்கின்றது எனவும், கவனமாக இருக்கவும் எச்சரித்துள்ளனர். மேலும், அந்த நபர் பயன்படுத்திய பைக்கின் நம்பரை வைத்து, அந்த நபரைத் தேடி வருகின்றனர்.