உன்னாவோ மாவட்டத்தில் தீ வைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

07 December 2019 அரசியல்
unnaorape.jpg

உன்னாவோ மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை தீ வைக்கப்பட்ட பெண், இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு, உத்திரப்பிரதேச மாநிலம், உன்னாவோ மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்டு கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால், அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், அவருடையப் புகாரினைப் போலீசார் ஏற்கவில்லை. இதனையடுத்து, அவர் நீதிமன்றத்தின் உதவியினை நாடினார். அதற்குப் பிறகு, போலீசார் அந்தப் பெண்ணின் புகாரினை ஏற்று, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், 5 பேரினைப் போலீசார் தேடி வந்தனர். அதில் சிவம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளிவந்த சிவம், மற்றொரு கூட்டாளியான சுபம் திரிவேதி மற்றும் பிற கூட்டாளிகளுடன் இணைந்து, புகார் தெரிவித்தப் பெண்ணைக் கொலை செய்ய திட்டம் தீட்டினர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட அப்பெண், உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நீதிமன்றம் செல்வதற்காக, அதிகாலை 4 மணிக்கு, ரயில் நிலையம் சென்றுள்ளார்.

அதனை எப்படியோ, அறிந்த சிவம் மற்றும் அவருடையக் கூட்டாளிகள் ரயில் நிலையம் செல்லும் வழியிலேயே, அப்பெண்ணை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். பின்னர், அப்பெண்ணின் மீது மண்ணெண்ய்யை ஊற்றித் தீ வைத்து ஓடி விட்டனர்.

இதனால், உடல் முழுவதும் தீப்பிடித்து எறியத் தொடங்கி உள்ளது. உடலில் கிட்டத்தட்ட 90% எரிந்த நிலையில், லக்னோ மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், விமானம் மூலம் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்ந்து அப்பெண்ணிற்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலையில் அப்பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சிவம் மற்றும் அவருடையக் கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது பற்றிப் பேசியுள்ள உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தப் பெண்ணிற்காக இரங்கல் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம், விரைவில் தகுந்த தண்டனை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS