உன்னவோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
2017ம் ஆண்டு 18 வயதுக்குட்டப்பட்ட சிறுமியினை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக உறுப்பினரும், உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினருமான குல்தீப் சிங் சங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை அன்று, இவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இதனிடையே நேற்று இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பினை அளித்த நீதிமன்றம், சிறுமியை பலாத்காரம் செய்தது, கண்ணியக் குறைவாக நடத்தியது, அவருடைய குடும்பத்தினை அவர்களுடைய ஊரை விட்டு வெளியேறக் கூறிப் பயமுறுத்தியது, பாலியல் பலாத்காரம் ஆகிய செயல்களை சங்கார் செய்துள்ளது நிரூபணமாகி உள்ளது.
இதனால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 25 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதில் 10 லட்ச ரூபாயினைப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், 15 லட்ச ரூபாயினை மாநில அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்த வழக்கில் செக்சன் 376 (2), மற்றும் போக்சோ சட்டத்தின் படி, சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி தர்மேஸ் ஷர்மா தீர்ப்பளித்தார்.