ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ்! பலி எண்ணிக்கை அதிகரிக்கும்!

19 April 2020 அரசியல்
uno.jpg

ஆப்பிரிக்காவில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கண்டிப்பாக அங்கு பலி எண்ணிக்கைப் பல மடங்கு உயரும் என, ஐநா எச்சரிந்துள்ளது.

உலக நாடுகள் முழுவதும், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், ஒன்றரை லட்சம் பேர் மரணமடைந்து உள்ளனர். இந்நிலையில், ஆப்பிரிக்க கண்டத்திலும் தற்பொழுது இந்த வைரஸானது பரவி வருகின்றது. இதிலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீண்டு வருகின்ற நிலையில், ஆப்பிரிக்காவில் இப்பொழுது கொஞ்சம் கொஞமாகப் பரவ ஆரம்பித்து உள்ளது.

இதனால், ஆப்பிரிக்க நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. அங்கு, சுகாதார வசதிகள் மிகவும் குறைவாகவே இருக்கும். அன்றாட வாழ்விற்கே, பொதுமக்கள் கஷ்டப்படும் சமயத்தில் அங்கு ஊரடங்கு என்பது கேள்விக்குறியான ஒன்று தான். கட்டுக்கடங்காத தீவிரவாதமும், அங்கு பெரிய அச்சமாக உள்ளது.

இந்நிலையில், இந்த வைரஸால் அங்கு பாதிப்பு ஏற்பட்டால், கண்டிப்பாக மூன்று முதல் முப்பது லட்சம் பேர் மரணமடைவர் எனவும், குறைந்தது அங்கு 120 கோடி பேர் பாதிக்கப்படுவர் எனவும், ஆப்பிரிக்க கண்டத்திற்கான ஐநாவின் பொருளாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதனால் தற்பொழுது ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள், கொரோனா வைரஸை எவ்வாறு தடுப்பது என தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. தற்பொழுது வரை அங்கு 1000 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த ஆண்டே மூன்று லட்சம் பேர் வரை மரணமடைவர் எனக் கூறப்பட்டும் உள்ளது.

HOT NEWS