தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் ஒன்றாக இணைத்துள்ளது #UnrivalledTamilActors என்ற ஹேஸ்டேக். தமிழ் சினிமாவில் பொதுவாக, விஜய் பெரிய நடிகரா அல்லது அஜித் பெரிய நடிகரா என்றப் போட்டியே நிலவி வரும். இதனால், இரு நடிகர்களின் ரசிகர்களும் தங்களுடைய பதிவின் மூலம் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென்று, தெலுங்கு சினிமாவா அல்லது தமிழ் சினிமாவா என சண்டையிட்டு வருகின்றது. இது, தற்பொழுது டிவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது. இருத் திரைத் துறையும் வெவ்வேறானவை. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாகாது என, ஒரு சிலர் கருத்துக் கூறினாலும் அதனை யாரும் மதிக்கவில்லை.
தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர். அதில், ஒரு சிலர் வேண்டும் என்றே, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.