உத்திரப் பிரதேசத்தின் முதல்வராக ஆனதில் இருந்து, அம்மாநிலத்தில் உள்ள முகலாயப் பெயர்கள் கொண்ட ஊர்களுக்கு எல்லாம், இந்து மற்றும் புராதணப் பெயர்களை வைத்து வருகின்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத். அவர் அப்படி ஒரு மாற்றத்தினை அம்மாநிலத்தில் தற்பொழுது மீண்டும் செய்துள்ளார்.
ஆக்ராவில் உள்ள முகலாயா அருங்காட்சியகத்தின் பெயரினை, சத்ரபதி சிவாஜியின் பெயருக்கு மாற்றியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், சத்ரபதி சிவாஜி ஆகச் சிறந்த மராட்டியர் மட்டுமல்ல. நல்ல வீரர் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகியும் ஆவார். அவர் பெயர் சூட்டுவதில் என்ன தவறு உள்ளது. அகிலேஷ் யாதவ் ஆட்சியின் பொழுது, தேசியவாதிகளின் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. என்னைப் பொறுத்தவரையில், தேசியவாதிகளாக இஸ்லாமியர்கள் இருந்தது கிடையாது.
அவர்கள் எப்படி, வரலாற்று நாயகர்கள் ஆவார்கள். அவர்கள் நம் நாட்டினை சூரையாடினர். ஆக்ராவிற்கும் சிவாஜிக்கும் ஒரு சுவாரஸ்யமானத் தொடர்பு உண்டு. ஔரங்கசீப் ஆட்சியின் பொழுது, சத்ரபதி சிவாஜியினை விருந்திற்காக அழைத்தார். ஆனால், சிவாஜி ஆக்ராவில் இருந்து, இனிப்பு தீணிகள் அடங்கிய கூடையினைப் பயன்படுத்தித் தப்பித்தவர் எனவும் கூறியுள்ளார்.