மருத்துவத்தைப் பற்றிப் பலரும் பேசுவதில்லை. காரணம் என்னவென்றால், அதைப் பற்றிய விழிப்புணர்வின்மையும், அறியாமையுமே ஆகும். காலத்திற்கு ஏற்ப, அனைத்துத் தொழில்களிலும் மாற்றம் வருவது போல, மருத்துவத்திலும் பல்லாயிரம் மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த மாற்றங்களால் மட்டுமே, பல்லாயிரம் அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்ற இயலும். இப்படி வரவிருக்கும் மாற்றங்களைப் பற்றி இங்கு நாம் பார்ப்போம்.
எலக்ட்ரானிக் பில்ஸ்இந்தப் புதிய கண்டுபிடிப்பை, ஜெர்மனியைச் சேர்ந்த மருந்துத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. இதன் இறுதிக் கட்ட ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் நாம் இதனை வளர்ச்சியடைந்த நாடுகளில், விரைவில் எதிர்ப்பாக்கலாம். இதனை உட்கொள்வதன் மூலம், உடலின் உட்புற பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், அதன் நிலைமைகளையும் நாம் எளிதாக அறிய இயலும். மேலும், இது அளிக்கும் தகவலை நம்மிடமிருக்கும் கருவியின் மூலம் காண முடியும்.
இன் சிலிக்கோ கிளினிக்கல் டிரையல்ஸ்இது எலக்ட்ரிக் சிப்களை விட, மிகவும் மேம்படுத்தப்பட்ட அதிநவீனமான, ஒரு கண்டுபிடிப்பு ஆகும். இது உடலில் ஏற்படும் மாற்றங்களை அறியப் பயன்படுகிறது. இதனை வைத்து மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி, நம்மால் அறிய இயலும். அதே சமயம், மற்ற கண்டுபிடிப்புகளைக் காட்டிலும், இதன் விலை மிகவும் குறைவு மற்றும் அளவிலும் மிகச் சிறியது.
இது ஆங்கிலப் படங்களில் வருவதுப் போல, சிறியக் கருவியாகும். இது உடலில் உள்ள சூழ்நிலையைக் கணிக்க உதவும் கருவியாகும். இதன் மூலம், உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இதற்கான மருத்துவத்தையும் அறிய இயலும். இதனைச் சாதாரணமாகவே, அனைவரும் பயன்படுத்த இயலும்.
விர்ச்சுவல் ரியாலிட்டிஇது நாம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம் என்றாலும், இது தொலைத் தொடர்புத் துறையிலேயே இருந்து வருகிறது. விரைவில், இது மருத்துவத் துறையிலும் கண்டிப்பாக பயன்பாட்டிற்கு வந்துவிடும், என்றால் அது மிகையாகாது. இதன் மூலம், மருத்துவர்களால் உடலில் உள்ள நுண்ணியப் பாகங்களைக் கூட மிகத் தெளிவாகவும் விரிவாகவும் பார்க்க இயலும். அதற்கேற்ப மருத்துவமும் செய்ய இயலும்.
3D-பிரிண்டிங்இது மிக விரைவாக வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பம் ஆகும். இம்முறையில், பாடப்புத்தகங்களே அச்சிடப்பட்டு வருகின்றன. ஆனால், விரைவில் இந்தத் தொழில்நுட்பட்த்தைப் பயன்படுத்தி, மனித உடலின் பாகங்களைச் செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருவதற்குக் குறைந்தது ஒரு 15 வருடங்கள் ஆகலாம்.
எவ்வளவு கண்டுபிடிப்புகள் இவ்வுலகிற்கு வந்தாலும், அது சாமானிய மக்களின் வாழ்க்கைக்கு உதவும் பொழுது மட்டுமே வெற்றியடைகிறது என்பது மட்டுமே, வராலாறு நமக்குக் கற்பித்தப் பாடம் ஆகும்.