தமிழகத்தில் பரவுவது அப்டேட்டடு கொரோனாவைரஸ்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

08 June 2020 அரசியல்
coronalife.jpg

தமிழகத்தில் தற்பொழுது புதுவித கொரோனாவைரஸ் பரவுவதை விஞ்ஞானிகளும், சுகாதாரத் துறையினரும் கண்டறிந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். இரண்டு இலட்சத்திற்கும் அதிகாமனோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸால் இந்தியா முழுவதும் வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவ ஆய்வாளர்களும் தொடர்ந்து இந்த வைரஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் தற்பொழுது தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதுவித வைரஸ் மாதிரி பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு, கிளேட் ஏ13ஐ என்ற மாதிரியே அதிகளவில் பரவி இருப்பதை விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

இந்த வைரஸ் பிரிவானது மிகத் தீவிரமாக செயல்படக் கூடியது எனவும், மிகவும் தீவிரத் தன்மை உடையது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இவைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், தற்பொழுது சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இது குறித்து, மருத்துவர் மிஸ்ரா கூறுகையில், கிளேட் ஐ/ஏ3ஐ பிரிவு தான் தற்பொழுது வேகமாகப் பரவி வருகின்றது எனவும், இது அனைத்து மரபணுக்களில் 41% கொண்டுள்ளது எனவும் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS