படம் ஏற்கனவே ஏ சான்றிதழுடன் வெளி வருவது, அனைவருக்குமே தெரியும். அதனால், படத்திற்கு செல்லும் முன், மனதை வன்முறைக்குத் தயார் செய்து கொண்டு செல்வது நல்லது. இந்த படமும் உறியடி முதல் பாகத்தைப் போலவே, எடுத்துள்ளனர்.
படத்தின் நாயகனான விஜய் குமாரும் அவருடைய நண்பர்களும், ஹாஸ்டலில் தங்கி, திருச்சியில் உள்ள கல்லூரியில் படிக்கின்றனர். அந்தக் கல்லூரியில் இருக்கும் நேரம் தவிர்த்து, அருகில் உள்ள தாபாவில் குடித்து நேரத்தைக் கழிக்கின்றனர்.
இந்நிலையில், விஜய் குமாரின் நண்பர்களுக்கும், அவர்களுடன் படிக்கும் மற்ற குழுவுக்கும் இடையே சாராயம் குடிக்கும் பொழுது, பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனையை மனதில் வைத்து, அந்த குழுவினர், விஜய் குமாரின் குழுவில் உள்ள, ஒரு நண்பரை கொலை செய்து விடுகின்றனர்.
இந்தக் கொலையை வைத்து, எப்படியாவது இந்த தாபாவை, பெரியதாக ஆக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில், பல செயல்களை செய்கிறார் கோபி. அவருடைய சூழ்ச்சிகளில் இருந்து, எப்படி கதாநாயகன் தப்பித்தார். அவருடைய காதல் என்ன ஆனது? படத்தின் முடிவு என, ஒருவித பரபரப்பான திரைக்கதையை வெற்றிகரமாக உருவாக்கி படத்தின் இறுதி என்ன, என நம்முடைய ஆர்வத்தைத் தூண்டுகிறார் இயக்குநர்.
படத்தில் வரும் காதல் காட்சிகள் நன்றாகவே, ரசிக்கும் படி உள்ளன. படத்தில் பாட்டினை காட்சியாக்கியிருக்கும் விதம் சுமார் ரகம். இருப்பினும், யாரும், இருக்கையில் இருந்து எழுந்து சென்றுவிடவில்லை. படத்திற்கு தான் ஏ சான்றிதழ் கிடைக்குமே என்ற எண்ணத்தில், சகட்டுமேனிக்கு, இரத்தம், கலவரம், பதற்றம் என நம்மையே ஒரு சில நேரங்களில் சளிக்க வைக்கிறது. இருப்பினும், படத்தின் வசனங்களும், காட்சியாக்கப்பட்டுள்ள விதமும் சரி அடுத்த என்ன தான் ஆகும் பார்ப்போமே என நம்மை இருக்கையில் கட்டி வைக்கிறது.
பாடல்களுக்கு ஆண்டனி தாசன் இசையமைத்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையும் சுமார் ரகமே. படத்தில் வரும் நடிகை ஹென்னா பெல்லா நம்மை ரசிக்க வைக்கிறார். படத்தின் இயக்குநரும், படத்தின் நாயகனுமான விஜய் குமார் தன்னுடைய கடமையை சிறப்பாக செய்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு, புதுமுகமாக இருந்தாலும், நடிப்பில் ஒரு வித பக்குவத்தை உடையவராகவே படம் முழுக்க வருகிறார்.
படத்தில் வரும் வன்முறைக் காட்சிகளை, சற்று குறைவாக எடுத்து இருக்கலாமோ, என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றுகிறது.
படத்தின் பாடல் காட்சிகளை, இன்னும் பிரமாதமாக எடுத்திருக்கலாம்.