மாடர்னா தடுப்பூசிக்கு அவரச அனுமதி! அமெரிக்காவில் வேகமெடுக்கும் மருந்து விநியோகம்!

21 December 2020 அரசியல்
vaccinecovid19.jpg

அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தால், அங்கு மாடர்னா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்திற்கு தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸிற்கு, தற்பொழுது தடுப்பு மருந்து வழங்கும் நிகழ்வானது முடுக்கி விடப்பட்டு உள்ளது. இன்று வரை ஏழு கோடிக்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில், திடீரென்று கொரோனா வைரஸ் பரவும் வேகமானது அதிகரித்து உள்ளது. அங்கு தற்பொழுது பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்திற்கு, அந்நாட்டு உணவு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது.

அதனடிப்படையில், அந்த மருந்தானது தற்பொழுது அமெரிக்கா முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் மாடர்னா நிறுவனமும் தன்னுடைய கொரோனா மருந்தினை, பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அனுமதி கோரியிருந்தது. அங்கு தற்பொழுது அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது உள்ள நிலையில், நிலமையினைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கழகமானது, மாடர்னா மருந்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.

ஏற்கனவே மாடர்னா மற்றும் பைசர் ஆகியவைகளின் தடுப்பு மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு விட்டன. இருப்பினும், இரண்டு மருந்துகளின் முடிவுகளும் சுமார் 91% 92% வெற்றியினைப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS