ஈராக்கில் இருந்து அமெரிக்கா வெளியேறுகின்றது! ஈரான் மகிழ்ச்சி!

30 March 2020 அரசியல்
usarmy.jpg

ஈராக்கில் இருந்து வந்த தங்களுடையப் படைத்தளங்களில் ஒன்றான, கே1 என்றப் படைத்தளத்தினை அமெரிக்க இராணுவம், தற்பொழுது ஈராக்கிடம் ஒப்படைத்துள்ளது.

ஈராக்கின் சதாம் உசேனைத் தூக்கிலிட்டப் பின், அமெரிக்காவின் படைகளானது ஈராக்கில் பாதுகாப்புக்காக இருக்க ஆரம்பித்தது. அன்று முதல், ஈராக்கின் படைகளுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் அவ்வப்பொழுது உரசல்கள் இருந்து கொண்டே வந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் படைகள், ஈராக்கில் இருந்து கொண்டு, அருகில் அமைந்து ஈரான் நாட்டின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான, குவாசிம் சுலைமானியினை கொன்றது.

இதனால், ஈராக், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே, போர் மூளும் அபாயம் நிலவியது. தொடர்ந்து, ஈராக்கில் உள்ள க்ரீன் ஸோன் எனப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதியில், ஏவுகணைத் தாக்குதல், ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. யார் நடத்தினார்கள் என யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள், தங்களுடைய நாட்டினை விட்டு வெளியேற வேண்டும் என ஈராக் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தாங்கள் விலையுயர்ந்த ஆயுதங்களையும், விமான ஓடுதளங்களையும் உருவாக்கி இருப்பதாகவும், நாங்கள் வெளியேற வேண்டும் என்றால், லட்சக்கணக்கான கோடிகளை ஈராக் தர வேண்டும் எனவும், அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

இதனிடையே, பாதுகாக்கப்பட்ட பகுதியில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள், அமெரிக்காவின் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அதில், அமெரிக்க வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, அமெரிக்க வீரர்களின் பாதுகாப்பு கருதி, ஈராக்கின் கே 1 படைத்தளத்தினை, ஈராக்கிடம் கொடுத்துவிட்டு அமெரிக்கா தற்பொழுது வெளியேற முடிவு செய்துள்ளது.

HOT NEWS