WHO அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! WHOவிற்கு சிக்கல்!

08 July 2020 அரசியல்
donaldtrumptax.jpg

உலக சுகாதார மையத்தில் இருந்து தற்பொழுது அமெரிக்கா வெளியேறியுள்ளதாக, அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் முதல், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால், தற்பொழுது வரை சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸால் நான்கு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேர் மரணமடைந்து உள்ளனர். இந்த வைரஸால், உலகின் நம்பர் ஒன் வல்லரசான அமெரிக்கா தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த வைரஸால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் மரணமடைந்து உள்ளனர். பத்து லட்சம் பேர் இந்த பாதிப்பில் இருந்து தற்பொழுது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த வைரஸ் விஷயத்தில் ஹூ அமைப்பானது, ஆரம்பம் முதலே, பல உண்மைகளை மறைத்து வருவதாகவும், சீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகின்றார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை உலக சுகாதார அமைப்பு மறுத்து வந்தது. தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ட்ரம்ப், உலகிலேயே சுகாதார அமைப்பிற்கு அதிக நன்கொடைகளை வழங்குவது அமெரிக்கா தான். ஆனால் தகுந்த நேரத்தில், கொரோனா வைரஸ் விஷயத்தில் எங்களை எச்சரிக்கை செய்யவில்லை. அவர்கள் சீனாவிற்கு கைப்பாவையாக செயல்படுகின்றனர் என்றுக் குற்றம்சாட்டினார். விரைவில், அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் எனவும் அறிவித்தார்.

இதனிடையே, சுவிட்சர்லாந்தினைத் தலைமையிடமாகக் கொண்ட ஹூ அமைப்பானது, ஜெனிவாவில் செயல்பட்டு வருகின்றது. இதில், 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பில் இருந்து, அதிகாரப்பூர்வமாக விலக உள்ளதாக அமெரிக்கா அந்த அமைப்பிற்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால், ஹூ அமைப்பிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இந்த கடிதத்தால், உலக நாடுகள் பலவும் அதிர்ச்சி அடைந்து உள்ளன. ஐநா சபையின் கிளை அமைப்புகளுள் ஒன்றாக கருதப்படும் இந்த அமைப்பில் இருந்து, வருகின்ற 2021ம் ஆண்டு ஜூலை ஆறாம் தேதி அன்று, அமெரிக்க விலகிவிடும். இதனால், அமெரிக்கா தற்பொழுது வரை வழங்கி வந்த நிதியானது நிறுத்தப்பட்டால், உலக சுகாதார மையத்திற்கு கடும் சிக்கல் ஏற்படும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS