WHO அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! டிரம்ப் அறிவிப்பு!

30 May 2020 அரசியல்
donaldtrumptax.jpg

உலக சுகாதார அமைப்புடனான உறவினை நாங்கள் துண்டித்துக் கொள்ளப் போகின்றோம் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பல லட்சம் கோடிக்கும் அதிகமாகவே உலக நாடுகளின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த கொரோனா வைரஸால் தற்பொழுது வரை ஒரு லட்சம் பேர் மரணமடைந்து உள்ளனர். தொடர்ந்து 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், சீனா தான் இந்த வைரஸ் பரவியதற்குக் காரணம் எனக் கூறி வருகின்ற டிரம்ப், உலக சுகாதார மையம் தொடர்ந்து குற்றாம்சாட்டி வருகின்றார். சீனாவின் கைப்பாவையாக, உலக சுகாதார மையம் செயல்பட்டு வருகின்றது. மேலும், நாங்கள் ஆண்டுக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தந்து வருகின்றோம். ஆனால், சீனா வெறும் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தான் தருகின்றனர்.

ஆனால், எங்களுக்கான சரியான வழிகாட்டுதல்களை உலக சுகாதார மையம் வழங்குவதற்குத் தவறிவிட்டது. இதனால், அந்த அமைப்பு, சீனாவின் கைப்பாவையாக செயல்படுவது உறுதியாகி உள்ளது. சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில், பல உண்மைகளை மறைக்கின்றது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்ற மாதம், உலக சுகாதார மையத்திற்கான பண உதவியினை தற்காலிகமாக நிறுத்திய நிலையில், தற்பொழுது மொத்தமாக, அந்த அமைப்பில் இருந்து விலகப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இதனால், உலக சுகாதார மையத்தின் நம்பகத்தன்மையானது, கேள்விக்குறியாகி உள்ளது.

HOT NEWS