ஜோ பிடனின் பாதுகாப்பினை அதிகரிக்க அமெரிக்க உளவுதுறை முடிவு!

09 November 2020 அரசியல்
joebidenwin.jpg

வெற்றியினைப் பெற்றுள்ள ஜோ பிடனுக்கு தற்பொழுது பாதுகாப்பினை அதிகரிக்க, அமெரிக்க உளவுத்துறை முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் மற்றும் துணை அதிபருக்கானத் தேர்தலில், ஜோ பிடனும், கமலா ஹாரீஸூம் டெமோக்ராட்டிக் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். அவருக்கு எதிராக, நடப்பு அதிபர் டொனால்ட் ட்ரம்பும், துணை அதிபர் மைக் பென்ஸூம் ரிபப்ளிக் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். இந்தப் போட்டியில், ஜோ பிடனும் கமலா ஹாரீஸூம் தற்பொழுது வெற்றிக்கான 270 வாக்குகளை பெற்றுள்ளனர். இதனால், அடுத்த அதிபர் மற்றும் துணை அதிபராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், தேர்தலில் முறைகேடு நடைபெற்று உள்ளது எனவும், இந்த முடிவுகளை என்னால் ஏற்க முடியாது எனவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். இந்த சூழலில், 280க்கும் அதிகமான இடங்களில் டெமோக்ராடிக் கட்சியானது வென்றுள்ளதால், அந்தக் கட்சியானது ஆட்சி அமைக்க உள்ளது. இதனால், அந்தக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோபிடன் அதிபராகவும், கமலா ஹாரீஸ் துணை அதிபராகவும் பொறுப்பேற்க உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், ஜோ பிடனுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை, பல மடங்கு உயர்த்த அமெரிக்க உளவுத்துறை முடிவு செய்துள்ளது. ஜோ பிடனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும், அதனைக் கருத்தில் கொண்டு அவருடைய பாதுகாப்பானது அதிகரிக்கப்படுவதாகவும் அமெரிக்க செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS