ஈரான் விவகாரத்தில் டிரம்ப்பிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம்! டிரம்பிற்கு சிக்கல்?

09 January 2020 அரசியல்
trumpsign.jpg

ஈரான் விவகாரத்தில் போர் வந்தால், அதில் போருக்கு எதிராகவும், டிரம்ப்பின் முடிவிற்கு எதிராகவும் நாங்கள் வாக்கெடுப்பு நடத்துவோம் என, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஆளுநர் நான்சி தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனை அடுத்து, ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்காவின் படைகள் மீது, ஈரான் இராணுவம் 22 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்தது.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க உள்ளது என தெரிவித்தார். போர் பதற்றத்தினைத் தணித்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவதற்கு, தன்னிடம் எவ்விதத் திட்டமும் இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால், ஒரு வேளை ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போர் வந்தால், கண்டிப்பாக பிரதிநிதிகள் சபையில் போருக்கு எதிராக வாக்களிப்பு நடத்தப்படும் என, சபாநாயகர் நான்சி தெரிவித்தார்.

1973ம் ஆண்டு, போர் அதிகாரச் சட்டத்தினை அமெரிக்க அரசாங்கம் உருவாக்கியது. அதன் படி, டிரம்ப் நடந்து கொள்ளவில்லை என நான்சி குற்றம் சாட்டியுள்ளார். தான் செய்வதை எல்லாம், நியாயப்படுத்தி வருகின்றார் டிரம்ப் என, நான்சி குற்றம்சாட்டியும் உள்ளார். தொடர்ந்து, அதிகாரத் துஷ்ப்ரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை டிரம்ப்பின் மீது, வைத்து வரும் குடியரசுக் கட்சியினர், ஈரான் மீது தாக்குதல் நடத்திய விஷயத்தில் கடுமை காட்டி வருவதாக, அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

HOT NEWS