விண்வெளி படைக்கு கார்டியன் என பெயர் வைத்த அமெரிக்கா! எதற்கு இவ்வளவு அவசரம்?

21 December 2020 தொழில்நுட்பம்
usspaceforce.jpg

விண்வெளிப் படையினை உருவாக்கி உள்ள அமெரிக்கா, தற்பொழுது அதற்கு கார்டியன்ஸ் எனப் பெயர் வைத்துள்ளது.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்காகவும் உலகின் நன்மைக்காகவும் புதியதாக விண்வெளிப் படை ஒன்றினை அமெரிக்க இராணுவம் உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்து உள்ளார். அந்தப் படையானது, விண்வெளியினைப் பாதுகாக்கும் எனவும், அந்நிய நாட்டு செயற்கைக்கோள்கள் அமெரிக்காவினை உளவுப் பார்ப்பதை தடுக்கும் எனவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜப்பானும் தன்னுடைய விண்வெளிப் படைக்கு ரோபோக்களைப் பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்தது.

இந்த சூழலில், இந்தப் படையினை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு இருந்தது. அந்தப் படையினை அமெரிக்காவின் ஏர்போர்ஸ் மேலாண்மை செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், தற்பொழுது அமெரிக்கத் துணை அதிபராக இருக்கும் மைக் பென்ஸ் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள விண்வெளிப் படைக்கு பெயர் வைத்துள்ளது. இந்தப் படைக்கு கார்டியன் எனப் பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் பெயரானது, 1983ம் ஆண்டு முதல் மிகவும் உயரியதாகவும், விண்வெளியினை கண்காணிக்கும் குழுவிற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகின்றது. இதனையே, தற்பொழுது அமெரிக்கா பயன்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், ப்ளோரிடாவில் உள்ள விமானப்படைத் தளமானது, தற்பொழுது விண்வெளிப் படைத் தளமாக மாற்றப்பட்டும் உள்ளதாக, மைக் பென்ஸ் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS