புதிய விதிகளுடன் அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வுக்கு அனுமதி!

17 April 2020 அரசியல்
donaldtrumpiran.jpg

அமெரிக்கா முழுவதும் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

ஊரடங்கினை உடனடியாக தளர்த்தும்படி, முக்கிய நகரங்களில் போராட்டம் வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை தினமும் 2000க்கும் அதிகமாக உள்ளது. மொத்தமாக தற்பொழுது வரை, 34,000 பேர் மரணமடைந்து உள்ளனர். 6,76,000 பேர் பாதிப்புள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், விரைவில் அமெரிக்காவின் பல பகுதிகளில் ஊரடங்கானது தளர்த்தப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், அமெரிக்காவில் நியூயார்க் பகுதியானது அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி, அப்பகுதியில் ஊரடங்கு அமலில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த ஊரடங்கினைத் தளர்த்துவதற்கான மூன்று கட்டங்களை கொண்ட திட்டத்தினை, பெரிய மருத்துவர் குழுவினைக் கொண்டு உருவாக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். முதல் கட்டத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிப்பது மற்றும் பொதுமக்களை வெளியில் நடமாட விடாமல் தடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் உள்ளன என்றார்.

இரண்டாவது கட்டத்தில், கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். அவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர். பொதுஇடங்கள் மூடப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றப்படும்.

மூன்றாவது கட்டத்தில், பொதுஇடங்களில் நடமாடத் தடை, சுகாதாரமான முயற்சிகள், தனிநபர்களுக்கு இடையிலான சமூக இடைவெளி உள்ளிட்டவைகள் அடங்கும் என்றுத் தெரிவித்தார். அமெரிக்காவின் பொருளாதாரமே, உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் எனவும், நாம் தற்பொழுது ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது இந்த வைரஸிற்கு எதிரானப் போரில் வெல்வதற்கு எனவும், அதற்கானப் பாதையில் நாம் வெற்றிகரமாகச் செல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

HOT NEWS