ரஷ்யாவின் விண்வெளி ஆயுதம்! கண்டுபிடித்த அமெரிக்கா இங்கிலாந்து கடும் எதிர்ப்பு!

24 July 2020 அரசியல்
spaceweapon.jpg

ரஷ்யா தற்பொழுது விண்வெளிக்கு புதிய ஆயுதம் ஒன்றினை அனுப்பியிருப்பதாக, அமெரிக்காவும், இங்கிலாந்தும் குற்றம்சாட்டி உள்ளன.

விண்வெளியினை அமெரிக்கா தன்னுடைய நாசா அமைப்பின் மூலம், தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது. அப்படி இந்த மாதம் 15ம் தேதி அன்று, புதியதாக ரஷ்யா விண்வெளிக்கு மர்ம பொருள் ஒன்றினை அனுப்பி உள்ளது. அந்தப் பொருளைக் குறித்து, அமெரிக்காவின் நாசா தற்பொழுது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றது. அது குறித்து ஒரு சில விஷயங்களையும் கூறியுள்ளது.

அதில், செயற்கைக் கோள்களுக்கு எதிரான புதிய ஆயுதத்தை ரஷ்யா தற்பொழுது விண்வெளிக்கு அனுப்பி உள்ளது என்றுக் கூறியுள்ளது. இது பற்றிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது எனவும் தெரிவித்து உள்ளது. இந்த ஆயுதங்கள் மற்றும் கருவிகள் காரணமாக, விண்வெளியிலும் அமைதிக் குறையும் என்றுக் கவலைத் தெரிவித்து உள்ளது அமெரிக்கா.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள, இங்கிலாந்தின் விண்வெளி இயக்குநரகத்தின் தலைவர் மார்ஷல் ஹார்வி ஸ்மித், ரஷ்யா இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடாது எனவும், அவ்வாறு ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

HOT NEWS