இந்தியாவிற்கு எதிரான சீனாவின் செயலை தடுத்த அமெரிக்கா ஜெர்மனி!

03 July 2020 அரசியல்
usagermany.jpg

இந்தியாவிற்கு எதிராக சீனாவின் செயலினை அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகள், வெற்றிகரமாகத் தடுத்துள்ளன.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் நாட்டின் கராச்சிப் பகுதியில் உள்ள பங்குச் சந்தையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது குறித்து பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இந்தத் தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என்றுக் குற்றம் சாட்டினர். இது குறித்து, சர்வதேசப் பாதுகாப்பு மையத்திடம் பாகிஸ்தான் முறையிட்டது.

அதற்கு ஆதரவாக சீனாவும் தன்னுடைய கண்டனத்தினைப் பதிவு செய்தது. அதுமட்டுமின்றி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோரிக்கை வைத்தது. இது குறித்துப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் உள்ளிட்டோர் இவைகளுக்கு இந்தியா தான் காரணம் என்றுக் குற்றம் சாட்டினர்.

இது குறித்து சீனா மறைமுகமாக செயல்பட ஆரம்பித்தனர். இதுபற்றி, செய்தி அறிக்கை ஒன்றினையும் சீனா வெளியிட்டது. அதன்படி, பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனத்தினை தெரிவித்துக் கொள்வதாகவும், பாகிஸ்தானிற்கு தங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், சீனா தெரிவித்து இருந்தது. மேலும், பாதுகாப்பு அமைப்பானது, உறுப்பினர்கள், பண் அளிப்பவர்கள், குழுவினர் மற்றும் தீவிரவாதத்திற்கு உதவும் அனைவரும் இங்கு விசாரிக்கப்பட வேண்டும்.

மேலும், பாகிஸ்தானிற்கு இத்தகைய இக்கட்டான சூழலில் நாம் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இது பாதுகாப்பு கவுன்சலில் விசாரிக்கப்பட்ட நேரத்தில், அமெரிக்காவும், ஜெர்மனியும் இந்தியாவிற்கு ஆதரவாக அமைதி காத்தன. அவர்கள் ஆதரவு அளிக்காததால், சீனாவின் முயற்சியானது தோல்வியில் முடிந்தது.

HOT NEWS