அமெரிக்காவில் கைதான சீன உளவாளி! அமெரிக்கா சீனா மோதல் அதிகரிப்பு!

27 July 2020 அரசியல்
mafiagangster.jpg

அமெரிக்காவினை உளவுப் பார்த்தாக, சிங்கப்பூரைச் சேர்ந்தவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடைபெற்று வருகின்ற மோதலானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஏற்கனவே வர்த்தகப் பிரச்சனை, அணுஆயுத ஒப்பந்தத்தில் இழுபறி, கொரோனா பிரச்சனை உள்ளிட்டவைகளால் அமெரிக்கா அரசாங்கம், தற்பொழுது சீனாவின் மீதும் கடும் கோபத்தில் உள்ளது. எப்படியாவது, சீனாவினைப் பழிவாங்கியேத் தீர வேண்டும் என்றுக் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில், ஹாங்காங்கினை சட்டவிரோதமாக சீனா கைபற்றுவதாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான மோதலிலும் இந்தியாவிற்கு தன்னுடைய ஆதரவினை அமெரிக்கா தெரிவித்து வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமெரிக்காவினை உளவுப் பார்ப்பதாகக் கூறி, ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தினை அமெரிக்க மூட உத்தரவிட்டது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினை சீன அரசு மூடியது. இந்நிலையில், அமெரிக்காவில் சிங்கப்பூரைச் சேர்ந்த நபரை அமெரிக்க அரசு கைது செய்துள்ளது. அந்த நபர், சீனாவிற்காக அமெரிக்காவினை உளவு பார்த்தாகவும், பலத் தகவல்களைத் திரட்டி, சீனாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஜூன் வீ இயோ என்ற அந்த நபர், தற்பொழுது கைது செய்துள்ளார். அதே போல், அவரைப் போல அமெரிக்காவில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவியினையும் அமெரிக்க அரசு கைது செய்து உள்ளது. எங்களுடைய அறிவு சார்ந்த விஷயங்களை சீன திருடி வருவதாக, அமெரிக்கா பரபரப்புக் குற்றத்தினை சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS