சீனாவிற்கு செல்லும் விமானங்களுக்கு தடை! அமெரிக்கா ஆட்டம் ஆரம்பம்!

05 June 2020 அரசியல்
donaldtrumptax.jpg

சீனாவிற்கு செல்லும் விமானங்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்பொழுது தடை விதித்துள்ளார்.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகப் போர் நடைபெற்று வருகின்றது. இதில் உச்சகட்டமாக, அமெரிக்காவில் விற்கப்படும் சீனப் பொருட்களுக்கு அதிக வரியினை விதித்தார் டிரம்ப். அதே போல், அமெரிக்காவின் பொருட்களுக்கு சீனாவில் அதிக வரி விதிக்கப்பட்டது.

தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸால் உலக நாடுகள் ஊரடங்கினை அறிவித்தன. அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து நாடுகளும் தற்பொழுது சீனாவின் மீது கோபத்தில் உள்ளன.

இதனிடையே, இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவியது எனவும், இதற்கு முழுக்க முழுக்க சீனா தான் காணம் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து வருகின்றார். சீனா இதற்கு தகுந்த பதிலை அளித்தேத் தீர வேண்டும் எனவும் அவர் கூறியும் வருகின்றார். அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுக்களை, சீனா மறுத்து வருகின்றது.

இவைகளுக்கு மத்தியில், அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு வரும் விமானங்களுக்கு, சீன அரசாங்கம் தடை விதித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவிற்கு வரும் சீன விமானங்களை தடை செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இதனால், இரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் புதியப் பிரச்சனை தலை தூக்கியுள்ளது. இந்த மோதல், பெரிதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS