அமெரிக்கா-சீனா வர்த்தக ஒபந்தம் கையெழுத்தானது! விரைவில் சீனா செல்வேன்! டிரம்ப்!

20 January 2020 அரசியல்
usa-chinasign.jpg

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில், வர்த்தகப் போரானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இதனால், உலகளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகின்றது. இரண்டு நாடுகளும், தங்களுடையப் பொருட்கள் மீது அதிக வரியினை விதித்தன. மேலும், அந்நாடுகளுக்குள் இறக்குமதியானப் பொருட்கள் மீதும் வரியினை உயர்த்தின.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா இரண்டு நாடுகளுக்கும் இடையிலான, முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு, இரண்டு நாடுகளும் சம்மதம் தெரிவித்ததால் சாத்தியமாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், சீனாவின் துணை பிரதமர் லீயூ ஹியும் இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் தங்கள் நாட்டின் சார்பில் கலந்து கொண்டனர்.

அப்பொழுது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவிற்கு நான் வருகை தருவதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை எனக் கூறியுள்ளார். மேலும், விரைவில் வர்த்தக ஒப்பந்தம் முழுமை பெறும் என, தாம் நம்புவதகாவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS