உளவு பார்த்தார்கள்! சீன தூதரகத்தினை மூடுங்கள்! அமெரிக்கா அதிரடி!

24 July 2020 அரசியல்
donaldtrumptax.jpg

அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்தினை உடனடியாக மூடுங்கள் என, அமெரிக்க அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் தற்பொழுது நாளுக்கு நாள் சண்டை முற்றிக் கொண்டே இருக்கின்றது. ஏற்கனவே, வர்த்தகப் போரால், இரண்டு நாடுகளுக்கு இடையிலும் சிக்கல்கள் இருந்து வந்தன. இந்நிலையில், சீனாவில் இருந்துப் பரவிய கொரோனா வைரஸால், அமெரிக்கா தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், சீனாவினை எப்படியாவதுப் பழி வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், சந்தர்ப்பத்திற்காக அமெரிக்கா காத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று, அமெரிக்கா தயாரித்து வருகின்ற கொரோனா தடுப்பு மருந்து குறித்தத் தகவல்களை, சீனா தன்னுடைய ஹேக்கர்கள் மூலம் திருட முயற்சித்தாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இதனைத் தொடர்ந்து, ஹூஸ்டன் நகரில் அமைந்திருக்கும் சீன தூதரகத்தினை மூட கட்டளையிட்டு உள்ளது. இதற்கு மூன்று நாள் கெடுவும் அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ளது. தொடர்ந்து அறிவு சார்ந்த விஷயங்களை சீன தூதரக அதிகாரிகள் திருடி, சீனாவிடம் தருவதாக, மைக் பாம்பியோக் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, ஹூஸ்டன் நகரில் உள்ள தூதரகத்தில் இருந்த பதிவுகள் எரிக்கப்பட்டதாக தகவல்கள் பரவி உள்ளன.

HOT NEWS