சீனாவில் இருந்து இந்தியா நோக்கி வரும் கம்பெனிகள்! வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?

22 May 2020 தொழில்நுட்பம்
employees.jpg

சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள், தற்பொழுது இந்தியாவின் மீது குறி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக, அமெரிக்கா தான் அதிகளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரமும் மிக மோசமடைந்து உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக, சீனாவினை அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டி வருகின்றது.

அமெரிக்க அதிபர் டொனாட்லட் ட்ரம்ப்பும், சீனாவில் இருந்து தான் இந்த வைரஸானது கசிந்து உள்ளது எனக் கூறினார். சீனாவினை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என, அவர் உட்பட பல நாட்டுத் தலைவர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் அடியாக, சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களில் பெரும்பாலானவை, சீனாவினை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் குறைந்த சம்பளத்தில் அதிக வேலை ஆட்கள் கிடைப்பர். அதுமட்டுமின்றி, ஏகப்பட்ட உற்பத்திப் பொருட்களும் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும். இதனைக் கருத்தில் கொண்டே, அமெரிக்காவினைச் சேர்ந்த நிறுவனங்கள், சீனாவிற்கு படையெடுத்தன. ஐபோன் உட்பட பல நிறுவனங்கள், சீனாவில் தான் தங்களுடையப் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அங்கு உற்பத்தி செய்ய இயலாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன அந்த நிறுவனங்கள். இந்த நிலையில், சீனாவினைத் தவிர்த்து பிற நாடுகளுக்குச் செல்ல அந்த நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன. அந்த நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் ஆட்கள், மலிவான விலையில் உற்பத்தி பொருட்கள் என பல விஷயங்களைக் கணக்கில் வைத்து இருக்கின்றன.

அந்த நிறுவனங்களை நம்முடைய நாட்டிற்கு அழைக்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இந்தியாவிற்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அனைத்து முயற்சிகளும், இந்திய தரப்பில் எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

HOT NEWS