அமெரிக்காவில் பரபரப்பாக இருக்கும் ஒரு செய்தி தான் இந்த செய்தி. ஆம், அமெரிக்காவின் சிஐஏ, கப்பற்படை உட்பட பல முக்கியப் பாதுகாப்பு நிறுவனங்களும், பெரிய ஆராய்ச்சிக்குப் பின், இந்த உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன.
2004ம் ஆண்டு, அமெரிக்க விமானப் படை விமானம், வானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, எதிர்ப்பாராத விதமாக, ஒரு வீடியோவினைப் பதிவு செய்தது. அந்த வீடியோவில், பறக்கும் மர்மப் பொருள் ஒன்றினைக் கண்டுள்ளனர். அது காற்றின் எதிர்த் திசையில் எவ்வித கஷ்டமும் இன்றி, வேகமாகப் பறப்பதாகவும் அது ஒரு பெரிய அளவிலான தட்டைப் போன்று உள்ளது என்றும் அந்த விமானத்தை ஓட்டும் விமானிக் கூறுகின்றார்.
அமெரிக்காவிற்குச் சொந்தமான நிமிட்ஸ் கப்பலைச் சேர்ந்த அந்த விமானம், கடலின் மேல் பறந்து கொண்டிருக்கும் பொழுது, இத்தகைய காட்சியைப் பதிவு செய்துள்ளது. இதனை சோதனை செய்ய பலரும் முயற்சித்த நிலையில், தற்பொழுது பொது மக்களின் பார்வைக்காக, ஒரே ஒரு வீடியோவை மட்டும் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கமே, இதனை ஆராய்ச்சி செய்து, வேறு வழியில்லாமல் இது உண்மை என ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ, நமக்கு வருவது ஒரே ஒரு சந்தேகம் தான். இந்த ஏலியன்கள், யூஎஃப்ஓக்கள் என அனைத்துமே, ஏன் அமெரிக்காவில் மட்டும் வருகின்றன என யாராவது கூற முடியுமா?
edition.cnn.com/2019/09/18/politics/navy-confirms-ufo-videos-trnd/index.html?utm_source=twCNN&utm_content=2019-09-20T04%3A46%3A07&utm_medium=social&utm_term=video