தைவானை நாடாக பார்க்க வேண்டாம்! சீனா கோரிக்கை! 100 கோடி டாலருக்கு ஆயுதம் வழங்கிய அமெரிக்கா!

22 October 2020 அரசியல்
chinesearmy.jpg

தைவானை தனி நாடாக பார்க்க வேண்டாம் எனவும், அது எங்கள் நாட்டுடன் இணைக்கப்பட வேண்டிய ஒரு பகுதியே எனவும் சீனா அடாவடியாகத் தெரிவித்து உள்ளது.

தற்பொழுது தைவானிற்கும், சீனாவிற்கும் இடையில் உரசல் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து, தைவான் தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என, சீனா கூறி வருகின்றது. இது குறித்து பேசியுள்ள தைவான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வு, மற்ற நாடுகளுக்கு சீனா கடுமையான அழுத்தம் தந்து வருகின்றது. எங்களை தனி நாடாக, மற்ற நாடுகள் பார்க்கக் கூடாது என பிடிவாதமாக கூறி வருகின்றது எனக் கூறியுள்ளார்.

உலகின் பலம் பொருந்திய பல நாடுகள், தற்பொழுது எங்களுடன் நல்ல உறவில் உள்ளனர். தங்களுடைய ஏவுகணைகளை, எங்களுடைய எல்லைப் பகுதிகளில் நிலை நிறுத்தி வருகின்றது. தைவானை, தன்னுடைய இராணுவத்தினைப் பயன்படுத்தி ஆக்கிரமிக்க பார்க்கின்றது. ஒருவேளை அவ்வாறு நடைபெற்றால், கட்டாயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எங்களுக்கு உதவிக்காக வருவார்கள் என நம்புகின்றோம் என்றுக் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா தைவானிற்காக, 100 கோடி டாலர் மதிப்புடைய ஆயுதங்களை தற்பொழுது வழங்கியுள்ளது. இதனால், தைவானின் இராணுவ பலம் அதிகரித்து உள்ளது.

HOT NEWS