இனி கொரோனாவை கண்டுபிடிக்க 10 நிமிடம் போதும்! அமெரிக்கா புதிய சாதனை!

07 October 2020 அரசியல்
covid19-test.jpg

இனி கொரோனா வைரஸை 10 நிமிடத்தில் கண்டுபிடிக்கும் வகையில், அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய கருவியினை உருவாக்கி உள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், இந்த நோய் பாதிப்பிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியானது வேகமாக்கப்பட்டு உள்ளது. அதே போல், கொரோனா வைரஸைக் கண்டுபிடிக்கும் கருவிகளை எளிமைப்படுத்தியும், கொரோனாவைக் கண்டுபிடிக்கும் கால அளவினைக் குறைக்கும் விதத்திலும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றினைக் கண்டுபிடித்து உள்ளனர். அதனைப் பயன்படுத்தி, வெறும் பத்தே நிமிடத்தில் நம்மால் கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றதா இல்லையா எனக் கண்டுபிடிக்க இயலும். இந்தக் கருவியில் ஒரு சென்சார் உள்ளது. அது, நம்முடைய வியர்வை, ரத்தம் மற்றும் உமிழ்நீர் ஆகியவற்றினைப் பயன்படுத்தி கொரோனா தொற்றினைக் கண்டுபிடிக்க உதவுகின்றது. இதில் உள்ள சென்சாரானது 3டி கிராபேன் தொழில்நுட்பத்தினை, அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS