பரூக் அப்துல்லா ஓமர் அப்துல்லா விடுதலை! அமெரிக்கா வரவேற்பு!

26 March 2020 அரசியல்
omarabdullahrel.jpg

கடந்த ஆண்டு, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்து, மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், ஜம்மூ மற்றும் காஷ்மீர் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், மதக் குருக்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

ஜம்மூ மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர்களான பரூக் அப்துல்லா மற்றும் ஓமர் அப்துல்லாவினைப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 220க்கும் நாட்களுக்கும் மேலாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தான் பரூக் அப்துல்லா, வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தற்பொழுது ஓமர் அப்துல்லாவும் வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால், அவருடைய ஆதரவாளர்களும், அவருடையக் கட்சியனரும் அவருடைய விடுதலைக்கு நன்றித் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் விடுதலையை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியவின் அமெரிக்க துணை செயலாளரான ஜி வேல்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஓமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் விடுதலையாகி இருப்பது நல்ல விஷயம். அதே சமயம், வீட்டுச் சிறையில் உள்ள மற்ற தலைவர்களையும் இந்திய அரசு விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

HOT NEWS