சீனா மீது பொருளாதாரத் தடை கொண்டு வர சிறப்பு சட்டம்! அமெரிக்காவில் நிறைவேறியது!

03 July 2020 அரசியல்
trumpsign.jpg

ஹாங்காங் பகுதிக்கான பாதுகாப்பு சட்டத்தினை சீனா தற்பொழுது வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இதற்காக, ஹாங்காங் முழுவதும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் போராட்டத்திற்கு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றனர். சுமார் 35 லட்சம் குடியுரிமையினை, ஹாங்காங் வாசிகளுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கத் தயாராக இருப்பதாக, இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சீனாவின் அடவாடி செயல்களை தாங்கள் கண்டிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், அங்கு தற்பொழுது சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி, இனி சீன நிறுவனங்களுடன் அமெரிக்க வங்கிகள் வர்த்தகம் செய்தால், அதனைத் தண்டனைக்குரியதாக கருதப்படுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விரைவில், அது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே, கொரோனா விவகாரத்தில் சீனாவின் மீது அடுக்கடுக்கானப் புகார்களை, அமெரிக்கா தெரிவித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், ஹாங்காங் விவகாரம், தற்பொழுது அமெரிக்காவிற்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதே போல், ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து, சீனாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கத் தேவையான அனைத்து செயல்களையும் அமெரிக்க அரசாங்கம் செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS