கொரோனா தடுப்பு மருந்து! 10 கோடி பல்க் ஆர்டர் செய்த அமெரிக்கா!

03 August 2020 அரசியல்
trumpsign.jpg

கொரோனா தடுப்பு மருந்தினை 10 கோடி டோஸ் வாங்க, அமெரிக்க அரசு ஆர்டர் செய்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி வருகின்ற, கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த பரிசோதனைகளில், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் உள்ளன. ரஷ்யா தற்பொழுது கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதே போல் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், இந்த வைரஸிற்கு எதிரான மருந்தினை பரிசோதித்து வருகின்றது. இந்த சோதனைகள் முடிந்ததும், வெளியாகும் முடிவுகளின் அடிப்படையில் இந்த வைரஸிற்கான மருந்தானது வெளியாக உள்ளது. உலகளவில் பார்க்கையில், அமெரிக்க நாட்டில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

அந்த நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துக் கொண்டே உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில், அந்த நாட்டின் அதிபர் பதவிக்கானத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும். எனவே, அதற்குள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தினை, அமெரிக்கா வாங்கியேத் தீர வேண்டும் என, கங்கணம் கட்டிக் கொண்டு உள்ளது.

கொரோனாவால் அமெரிக்க அதிபர் டிரம்பின் இமேஜ் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸிற்கான தடுப்பு மருந்தினை மக்களுக்கு வழங்கினால், மீண்டும் அவருடைய செல்வாக்கு உயரும் என்று அவர் நினைக்கின்றார். எனவே, அதற்காக தற்பொழுது இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்திடம் இது குறித்து பல்க் ஆர்டர் ஒன்றினைத் தந்துள்ளது அமெரிக்கா.

அதன்படி, கொரோனோவிற்கான மருந்து தயாரானதும், அதனை முதலில் அமெரிக்காவிற்குத் தான் தர வேண்டும் என்றுக் கூறியுள்ளது. இதற்கானப் பணத்தினையும் அது ஏற்கனவே செலுத்திவிட்டது. அதுமட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டின் சனோபி, கிளாக்சோஸ்மித்கிளைன் உள்ளிட்ட நிறுவனங்களிடமும் மொத்தமாக 10 கோடி டோஸ் மருந்தினை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஆர்டரையும், அமெரிக்க அரசு செய்துள்ளது.

HOT NEWS