இந்தியாவிற்கு மீண்டும் முன்னுரிமை! அமெரிக்கா ஆலோசனை!

20 June 2020 அரசியல்
moditrumpdeal.jpg

இந்தியாவிற்கு வர்த்தக முன்னுரிமையை மீண்டும் வழங்க, அமெரிக்கா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா இனியும் வளரும் நாடு இல்லை என்றுக் கூறி, அதற்கு வழங்கி வந்த வரிச்சலுகைகளை அமெரிக்க அரசாங்கம் தடுத்தது. மேலும், இந்தியா மற்றும் சீனாவிற்கு வர்த்தக முன்னுரிமை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால், இந்தியாவிற்கு கிடைத்து வந்த 190 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியானது, நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்பொழுது அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் நல்ல உறவு நிலை நீடித்துக் கொண்டு இருக்கின்றது. மேலும், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பிரச்சனை நீடிக்கின்றது. அதுமட்டுமின்றி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்பொழுது பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால், இந்தியா மற்றும் சீனாவிற்கு நிறுத்தியிருந்த வர்த்தக முன்னுரிமையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்கா முன் வந்துள்ளது.

அதன்படி, இந்தியாவிற்கு மீண்டும் பழையபடி, வர்த்தக முன்னுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து, அமெரிக்க செனட் சபைக்கு ராபர்ட் லைதீசர் பரிந்துரை செய்ய உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். அவ்வாறு நாங்கள் வழங்கும் பட்சத்தில், இந்தியாவும் எங்களுக்கு பொருளாதார சலுகைகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

HOT NEWS