இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் அனுப்பும் அமெரிக்கா! டிரம்ப் தகவல்!

16 May 2020 அரசியல்
trumpventilators.jpg

இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் அனுப்ப, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை நன்கொடையாகத் தர உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், தகவல் பகிர்ந்துள்ளார். அதில், நான் இந்தியாவிற்கு அமெரிக்க அரசாங்கம், வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்க உள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நாம் இந்தியாவிற்கும், மோடிக்கும் துணையாக நிற்போம்.

நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தினைக் கண்டுபிடிப்போம். நாம் இணைந்து, கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரியினை வீழ்த்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் கேட்டுக் கொண்டதற்காக, இந்திய அரசாங்கம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இந்த மருந்தானது, அங்குள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளைக் குணப்படுத்துப் பெரிதும் உதவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS