கொரோனா மருந்திற்காக சீனாவுடன் ஒத்துப் போக தயார்! அமெரிக்கா அதிரடி!

23 July 2020 அரசியல்
donaldtrumptax.jpg

கொரோனாவிற்கு முதலாவதாக மருந்து தயாரிக்க, உலகின் எந்த நாடுடனும் இணைந்து செயல்படத் தயார் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அவர் பேசுகையில், விரைவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த நல்ல செய்தி வெளியாகும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். அப்பொழுது, செய்தியாளர் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேள்வி கேட்டார்.

அவர், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க, சீனாவுடன் இணைந்துப் பணியாற்றத் தயாரா எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், உலகிலேயே முதலாவதாக கொரோனாவிற்கான மருந்தினைக் கண்டுபிடிக்க, எந்த நாட்டுடனும் எவ்வித பாரபட்சமுமின்றி செயல்படத் தயாராக அமெரிக்கா உள்ளது. நாம் எதிர்பார்க்கும் வேகத்தினை விட, அதிவேகத்தில் கொரோனா மருந்து தயாரிக்கப்படும்.

இந்த மருந்துகளை அமெரிக்கா முழுவதும் விநியோகிக்கை, அமெரிக்க இராணுவம் உதவும் என்று அவர் தெரிவித்தார். உலக சுகாதார மையம் இந்த ஆண்டு கொரோனா மருந்து கிடைக்காது எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS