அமெரிக்கா-தாலிபான் பேச்சுவார்த்தை! படைகளை விரைவில் திரும்பப் பெறும் அமெரிக்கா?

02 March 2020 அரசியல்
taliban.jpg

அமெரிக்கா மற்றும் தாலிபானுக்கும் இடையில், சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இரு தரப்பினரின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சு வார்த்தையில், ஆப்கானிஸ்தான் பகுதியில் இனி தாலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என ஒருமனதாக கூறினார்கள். இதனைத் தொடர்ந்து, நிலைமை அமைதியாகச் செல்லும் பட்சத்தில், அப்பகுதியில் உள்ள பிற நாட்டுப் படைகளுடன், தங்களுடையப் படைகளையும் பின்வாங்கிக் கொள்வதாக, அமெரிக்கா உத்திரவாதம் அளித்துள்ளது. மேலும், இது நடக்க 14 மாதங்கள் ஆகும் எனவும் கூறியுள்ளது.

HOT NEWS